Saturday, May 5, 2012

ஒரு முறை  ஷிர்டி கிராமத்தில் காலரா தொத்து பரவர  அபாயம் இருந்தது . பாபா ஒரு நாள் தன் முகம், கை, வாய்  அலம்பிக் கொண்டு கோதுமை மாவு தயாரிக்க  எண்ணி . சாக்கின் மேல் திருகை வைத்து ஒரு கைப்பிடி கோதுமை எடுத்து திருகைக்குள்  போட்டு அரைக்க ஆரம்பிச்சார் . அறைக்கரார், அறைக்கரார்  அரச்சிண்டே இருக்கார் . இது எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சு எல்லாரும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டா . அவர் பிச்சை எடுத்து தான் வாழ்ந்தார் .அதனால  அவருக்கு எதுக்கு அவ்வளோ மாவு என்று யோசிக்க ஆரம்பிச்சு , ஒரு வேளை நம்மிடம் இருக்கிற அன்பில் நமக்கு பகிர்ந்து கொடுத்துடுவரோ என்றும் நினைச்சான்ங்க  அதுல 4  பெண்மணிகள் சாய் நாதரைப் பார்த்து அவரைப் பாத்து நங்கள் இருக்கும் போது நீங்கள்  இந்த வேலை எல்லாம் செய்யலாமா   சாய் நாதா
  என்று  கேட்டு கிட்டே பாபா கிட்ட  இருந்த குச்சியை வாங்க நினைச்சாங்க . முதல்ல பாபா கோபப்பட்டாலும் பின் சாந்தமகினார். அவர்களும் சாய் லீலைகளைப் பாடியவாறு  மாவை அரைச்சு முடிச்சு நாலு   பாகமாக்கினார்கள் .  அவ்ளோ  அவங்க பாட்டுப் பாடி சந்தோஷமாய் இருந்த பாபா திடீர்னு கோபப் பட்டு  அவங்கள திட்ட ஆரம்பிச்சிட்டார் . முதல்ல நீங்க எல்லாரும் இதைக் கொண்டு நம் ஷிர்டி கிராம எல்லைல போட்டுட்டு வாங்கனு திட்ட ஆரம்பிச்சிட்டார் . அவங்களும் முணுமுணு தாலும் பாபா நம் நன்மைக்கு தான் சொல்லவார் என்று  அவர் சொன்னதைத் தட்டாமல் கிராம எல்லைல போயி கொட்டிட்டு வந்தாங்க . அப்பறம்தான் தெரிஞ்சுது காலரவை விரட்ட  பாபா செய்த உபாயம்னு ............. எல்லாரும் சந்தோஷமா பாபாவை துதித்தனர். நாமும் சொல்வோம் சத்குரு சாய் நாத் மகாராஜ் க்கு ஜெய்                               

No comments:

Post a Comment