ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் .. பாபாவின் கதைகள் படிப்பதுக்கும் அதை மற்றவர்களுக்கு சொல்ல்றதும்மே ஒரு அலாதியான மனநிறைவு தான்.. முதல்ல கோதுமை மாவு அரச்சு காலரவ ஊரை விட்டே துரத்தினார் இல்லையா ? இப்போ ஹேமத்பந்த்க்கு இந்த பட்டம் எப்பிடி வந்தது ன்னு பாக்கலாம் . ஹேமத்பந்த் நண்பர்கள் , அவரை ஷீரடிக்கு போங்கோ ன்னு ரொம்ப நாளா சொல்லிண்டு இருந்தாங்க , ஆனா என்ன காரணத்தாலோ அவரால காரணதலையோ போகவேமுடியல. லோனவாலாலா இருந்த அவர் நண்பர்க்கு ஒரு குழந்தை இருந்தான் .அவனுக்கு ஒரே ஜுரம் . என்னென்னவோ வைத்தியம் பிரார்த்தனை எல்லாம் பண்ணியாச்சு ஆனா அந்த குழந்தைக்கு ஜுரம் கொறயவே இல்லை . கடைசியா அவர் குருவை அந்தப் பையன் பக்கத்துல அமர்த்தினாங்க . அப்பவும் ஜுரம் கொறயவே இல்ல . அதனால ஹேமத்பந்த் என்ன நினைச்சார் தெர்யுமா? உதவி பண்ணாத குருவால என்ன பயன் என்று நினச்சு ஷிர்டி போவதை தள்ளி போட்டார் . ஆனால் கூட பாபா அழைச்சா போக தானே வேண்டும் . ஹேமத்பந்த் ஐயாவின் உயர் அதிகாரி பச்சினுக்கு சுற்றுலா போய்க் கொண்டிருந்தார் . அவர் ஹேமத்பந்த் ஐயாவை அழைத்து வர ஆளை அனுப்பினார்.ஏன் ஷிர்டி போகவில்லை என்று கோபித்துக் கொண்டு உடனடியாகப் போகுமாறு சொன்னார் .ஹேமத்பந்த் ஐயாவும் அன்னிக்கே ஷிர்டி போக பொருள்களை கட்டி கிட்டு தயாரானார். தாதருக்கு போய் அங்கேந்து மன்மாட் போகும் வண்டியை பிடிக்க நினைச்சு தாதரில் பயணசீட்டு வங்கி வண்டியில் உக்கந்தப்போ ஒரு இஸ்லாம் பெரியவர் ஐயாவிடம் வந்து அவர் வைத்துள்ள மூட்டை முடிச்சுகளைப் பாத்து எங்கே போறீங்க? என்று கேட்டார் ஹேமத்பந்த். ஐயாவும் தான் ஷிர்டி போவதாக சொன்னார் .உடனே அப்பெரியவர்ஹேமத்பந்த்,விடம், ஐயா நீங்கள் தாதரில் நிக்காமல் நேராக போரிபந்தருக்கு போய்டுங்க மன்மாட் மெயில் தாதரில் நிக்கதுனு சொன்னார் . இந்த அற்புதம் நடக்காமல் இருந்திருந்தா?, ஐயா அடுத்தநாள் ஷிர்டி போய் இருக்க முடியாமல் போயிருக்கும் . பல சந்தேகங்கள் வந்திருக்கும் . அனால் அடுத்த நாள் காலைல 9 .30 குள்ள ஐயா ஷிர்டி போய்ட்டார் . அங்க அவர் நண்பர் காத்துக் கொண்டிருந்தார் .அப்போது எல்லாம்தங்கறதுக்கு ஒரே ஒரு இடம் தன உண்டு .ஹேமந்த் ஐயா அவர்கள் பாபாவின் தரிசனத்துக்காக ஆவலாக இருந்தார். முகம் கை கால் அலம்பி முன்னோடி தரிசனதுக்க்காகக் காத்துக் கொண்டிருந்தார் பாபாவின் தரிசனம் கிடைத்தபின் அய்யாவின் மனம் மனம் எல்லாம் அமைதி அடைந்தது . பின் தாங்கும் இடத்தில் ஒரு விவாதம் நடந்தது . நமக்கு குரு அவசியம்தானா என்று ரொம்ப நேரமா அன்ன விவாதத்துக்கு ஒரு முடிவும் கிடைக்கல.பின் எல்லாரும் பாபாவின் தரிசனத்துக்கு போனபோது என் நண்பரை பாபா எதை பத்தி உங்களுக்குள் விவாதம் என கேட்டார் . அப்போது பாபா ஹேமத்பந்த் என்ன சொல்றார்னு கேட்டார்? மசூதிக்கும் அவங்க இருந்த இடத்துக்கும் ரொம்ப தூரம் இருக்கும். எல்லாம் அறிந்த ஒருத்தரால்தான் இதை சரியாய் சொல்லமுடியும் சாய் நாதர் சர்வவியபியாக இருப்பதால்தான் அது முடிகிறது.
சாய் பாபா அவரை ஏன் அப்படி அழைத்தார் என்று அப்போ அவருக்குத் தெரியல? எதிர் காலத்தில் கல்வி , கேள்விகளில் சிறந்த ஒருவர்தான் சாய் நாதரின் சரித்திரத்தை எழுத முடியும் , அந்தப் பணிக்கு சாய் தேர்ந்தெடுத்தவர்தான் தபோல்கார் என்கின்ற ஹேமத்பந்த்அய்யா
சாய் பாதமே துணை .............ஜெய் சாய் ராம்
No comments:
Post a Comment