சிர்டியே உலகின் அழகிய புனிதத் தலம் ஸ்ரீ சாய் பாபா அவதரித்து அருளிய தலம் கற்பத்ருவின் பேறு பெற்ற வேப்ப மரம் அதன் மடியில் இருந்தாரே இறைவனின் வரம் 16 வயதே நிரம்பிய பாலகனாம் , பல சூரியர் சந்திரர் சேர்ந்த ஒளிப் பிழம்பாம் ,ஞானம் அழகும் நிறைந்த ஆண்டவர் மகனாம், நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம் திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய் தேஜஸ் கருணை நிறைந்த உருவமாய் வெயில் மழை பாராமல் தவமும் செய்தாய் பாலகன் ரூபத்தில் உலகில் தோன்றினாய் . உன் தாய், தந்தை யாரும் அறியாரே , உலகம் என் வீடு இறை என் தாய் என்றாய். சிலர் அறிந்தனர் நீ சிவனின் ரூபம் சிலர் மொழிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம் தத்தாத்ரேயா ரூபமோ , ஸ்ரீ ராமனே நீதானோ பீர் அவுலியவோ பரப்ரம்மமே நீதானோ எந்த ருபமனாலும் நியே எங்கள் இஷ்ட தெய்வமும் ஆனாய் பக்தரின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய் .எத்தனை.எத்தனை லீலைகள் புரிந்தாய் எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய். தெய்விட்டாத இன்பம் அன்றோ உன் திருக் கதைதான் கேட்ப் பவரும் திளைப்பரே கானில் தேன் அருவிதான் மத ஜாதி பேதங்களால் அழியும் மானிடம் உய்வுற உறவுப்பாலம் அமைத்த மகா அவதாரம். சாந்த் பாட்டிலின் குதிரியெய் தேடித் தந்தாய். திருமண வீட்டாரோடு சிர்டியெய் அடைந்தாய். ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய். அருளோடு சேர்ந்து அற்புத அனுபவங்களும் தந்தாய் மசூதித் தாயாம் த்வரகாமஈ அதில் வசித்து பக்தர்களை இரட்சிக்கும் நீ அன்னை அன்றோ சாயி . உன் திருக்கரமளித்த உதி அரு மருந்தாகும் உன் திரு அருட் பார்வை துயரினை போக்கும் . அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும், உன் திருப் பாதங்கள் தொட்ட சிர்டி சொர்கமாகும் அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரக்சிதாஏ உன் அற்புத லீலைகள் அமுதே அமுதினும் இனிய பேரமுதே நீருற்றி அகல் தீபங்களை ஏறியச் செய்தாய் .ஒளி ஜோதிஈலே அக்ஞான இருள் களைந்தாய்.பக்தனின் கண்களில் நீர் சொரிந்தலே அக்கணமே ,துயர் துடைக்க அவன் அருகில் நிர்ப்பாஏ , தாமு அன்ன ஜாதகத்தில் ஒரு கோளாறு வருந்தி அழுதார் இல்லியே புத்திரப் பேறு உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே அளித்தாய் மாங்கனிகள் அடைந்தார் தாமு சந்தaனமே. விதியை மீறுமே உன் அற்புத அருளுமே நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டலே , சிவா பக்தன் மேகாவயும் நீ சினந்தயே உன்னை முஸ்லீம் என்ற பேதம் கொண்டதாலே பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத் தாழ்வு , மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாய்! உள்ளயே அவனை உறுமற்றினாயே உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே , கங்கை யமுனை நீர் உன் பாதத்தில் சொரிந்தாயே தாஷ்கனுவின் பிரயாகை தாகம் தனித்தாயே , மசுதியில் அமர்ந்து நீ அளிப்பாய் ஞானோபதேசம் , பசி உற்றோர்க்கு செய்வீர் அன்னதானம் ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே ! உண்மையே சொல் நேர்மையாய் வாழ் என்றாயே ஷிர்டி இன் கல் புல் கூட பேரு பெற்றதே உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே அப் புல்லும் கல்லுமாய் நான் இருந்தாலயே உன் திருவடியை சிரசேந்தி களிதிருபெய்நே , எத்தனை தவம் செய்தேன் நான் அரியாஎஅனே, இக்கணம் உன்னைத் தொழும் பேறுபெற்றய்னே , இறை அருள் பெற்ற மனிதரால் மட்டுமே உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே , உன் அருட்பார்வை என் மேல் பட்டாலயே என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே , உன் மென் கரங்கள் என் சிரசின் மேல் வைப்பாயே உத்தமன் உன்னை தொழுகின்றோம் செவி மடுப்பயே உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே என் கண்களில் ஒற்றிக் கொண்டடிடுவேநே.உன் பாதகமல தீர்த்தம் என் நாவில் பட்டாலயே நான் பெற்ற இன்பத்தை பாடிக்க் களிதிடுவேனயே . என் கனவினில் என்னை ஆட்கொள்வயே. நிஜந்தனிலும் நிதமும் என் துணை நிற்பாயே அணுவிலும் அனுவனாய் அகில அண்டமும் நீயானாய் என்ன்கேங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய் என் அன்னை நீ தந்தை நீ இவுலகையே முஉவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ , அகிலம் உன் இல்லம் ஆண்ட சராசரம் உன் ரூபம் அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம் . குசேலனையும் குபேரனாகும் சக்தி இருந்துமே உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள் சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள் சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே சாயி நாமம் நல்குமே பல நன்மைகளுமே நோய் உற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே த்யரோற்றோர் துன்பங்கள் விலகிடுமே சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே சாயி விரதத்தால் சுகம் சாந்தி நிலவிடுமே சாய் நாமம் தினமும் ஜபித்தாலுயே 9 வாரங்கள் சாயி விரதம் பூண்டாலுயே சாயி வருவார் இறங்குவார் நம்மிடமே துன்பம் களைவார் தருவார் ஆனந்தமயே சாயியே சாஸ்வதம் சாயியே சத்தியம் இதை நம்புபவன் வாழ்வில் இல்லை பெரும் துன்பம் சாயியே பரமேஸ்வரன் , சாயியே பரமாத்மன் , சாயியே பராசக்தி ரூபன் , சாயியே பரந்தாமன் . நம்பிக்கை.பக்தி பொறுமையுடன் சரணடைவோம் . சாய் அருளால் பரமானந்தம் அடைவோம் .
ஸ்ரீ சாய் நாதருக்கே அர்ப்பணம்
ஸ்ரீ சாய் நாதருக்கே அர்ப்பணம்
No comments:
Post a Comment